தமிழ்ச்சங்கங்கள்

சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

  • கி.மு 7000தலைச்சங்கம்

  • கிமு 2387 - கிமு 306இடைச்சங்கம்

  • கி.மு. 400 - கி.பி. 200கடைச்சங்கம்

  • கி.பி. 1901மதுரைத் தமிழ்ச்சங்கம்

  • கி.பி. 2018இணையத் தமிழ்ச்சங்கம்

தலைச்சங்கம்

தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து.

இடைச்சங்கம்

இடைச்சங்கம் (கிமு 2387 - கிமு 306) ஏறைக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புற்று இருந்த தமிழ்ச் சங்கம் என்று மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. இது கபடாபுரத்தில் இருந்தது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது.

கடைச்சங்கம்

கடைச்சங்க காலம் என்பது கி.மு. 400 முதல் கி.பி. 200 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது; கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்; மேலும் 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்; 1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" எனச் சிலம்பின் உரைப்பாயிரம் கூறுகின்றது.

மதுரைத் தமிழ்ச்சங்கம்

மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் 'செந்தமிழ்' என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.

இணையத் தமிழ்ச்சங்கம்

"இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும்"

இ தமிழ்ச்சங்கம்

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் பண்டைய தமிழர்களைப் பற்றியும், வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் பற்றியும் உடனுக்குடன் எடுத்து கூறும் இணைய தமிழ்ச்சங்கம்.